மும்பை: கமலா மில்ஸ் வளாகம் அருகே தீ விபத்து !

மும்பை கமலா மில்ஸ் வளாகம் அருகே பல தளங்கள் கொண்ட பிரமாண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் ஒரு தளத்தில் இருந்து இன்று காலை புகை எழுந்தது. பின்னர் சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
 | 

மும்பை: கமலா மில்ஸ் வளாகம் அருகே தீ விபத்து !

மும்பை கமலா மில்ஸ் அருகே கட்டுமானப் பணி நடந்து வரும் அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று மீண்டும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

மும்பை கமலா மில்ஸ் வளாகம் அருகே பல தளங்கள் கொண்ட பிரமாண்ட கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தின் ஒரு தளத்தில் இருந்து இன்று காலை புகை எழுந்தது. பின்னர் சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனே 5 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த தீ விபத்தில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. இதேபோல் நேற்று மும்பை திலக் நகரில் அமைந்து உள்ள 16 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP