"மீண்டும் நமோ" வாசகம் பொருந்திய ஆடை அணிந்து பேரவைக்கு சென்ற எம்எல்ஏ.க்கள்!

ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் இருவர் " மீண்டும் நமோ" என்ற வாசகம் பொருந்திய சட்டை (டீ-சர்ட்) அணிந்து சட்டப்பேரவைக்கு சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.
 | 

"மீண்டும் நமோ" வாசகம் பொருந்திய ஆடை அணிந்து பேரவைக்கு சென்ற எம்எல்ஏ.க்கள்!

ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜகவைச்  சேர்ந்த எம்எல்ஏக்கள் இருவர் " மீண்டும் நமோ" என்ற வாசகம் பொருந்திய சட்டையை (டீ-சர்ட்) அணிந்து சட்டப்பேரவைக்கு சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

ஹிமாசலப் பிரதேச மாநில சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று பங்கேற்ற ஆளும் பாஜகவைச் சேர்ந்த  எம்எல்ஏ.க்களான வினோத் குமார், சுரிந்தர் சௌரி ஆகியோர், வரும் மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், "மீண்டும் நமோ" எனும் வாசகம் பொருந்திய டீ-சர்ட் அணிந்திருந்தனர்.

"அவை மரபை மீறி, பாஜகவினர் சட்டப்பேரவை பிரசாரக் களமாக மாற்றி வருகின்றனர்" என்று காங்கிரஸ் கட்சிக் கொறடா ஜெகத் சிங் நெகி சபாநாயகரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து, "எம்எல்ஏ.க்கள் யாரும் இனி தங்களது கட்சியை விளம்பரப்படுத்தும் வகையிலான ஆடைகளை அணிந்து அவைக்கு வரக்கூடாது" எனவும் அறிவுறுத்தினார்.

இதுகுறித்து எம்எல்ஏ சரிந்தர் சௌரி கூறும்போது, "பாஜக எம்.பி.யான அனுராக் தாக்குர், "மீண்டும் நமோ" வாசகம் எழுதப்பட்ட ஆடையை அணிந்து அண்மையில் மக்களவைக்கு சென்றுள்ளார். 
நாங்கள் மட்டும் ஏன் அந்த உடையை அணிந்து சட்டப்பேரவைக்கு போகக் கூடாது" எனக் கேள்வியெழுப்பினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP