காணாமல் போன விமானம்- கரும்புகையை பார்த்த பழங்குடி மக்கள்!

விமானப்படை விமானம் காணாமல் போன நேரத்தில் கரும்புகையை பார்த்ததாக அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பழங்குடி மக்கள் தெரிவித்துள்ளனர்.
 | 

காணாமல் போன விமானம்- கரும்புகையை பார்த்த பழங்குடி மக்கள்!

விமானப்படை விமானம் காணாமல் போன நேரத்தில் கரும்புகையை பார்த்ததாக அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பழங்குடி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய விமானப்படை விமானம் கடந்த திங்கட்கிழமையன்று அசாமில் இருந்து புறப்பட்டது. அதில் விமான சிப்பந்திகள் உள்பட 13 பேர் பயணம் செய்தனர்.

இந்நிலையில் விமானமத்திற்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் இடையிலான தொடர்பு விட்டுப்போனது.  அதையடுத்து விமானத்தை தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தும்பின் கிராமத்தில் பழங்குடி மக்கள் சிலர், மோலாே என்ற பகுதியில் உள்ள மலையில் பெரிய கரும்புகையை பார்த்ததாக தெரிவித்துள்ளனர். புகையைக் கண்டதாக அவர்கள் கூறும் நேரமும், விமானம் தொலைந்து போனதாகக் கருதப்படும் நேரமும் ஒத்து வருவதாக விமானப்படை அதிகாரிகள் கருதுகின்றனர்.

இதையடுத்து மலைவாழ் மக்கள் புகை எழுந்ததாக குறிப்பிடும் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என அருணாச்சலபிரதேசத்திலிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP