எம்.எல்.ஏக்களை சந்திக்க அமைச்சருக்கு அனுமதி மறுப்பு 

மும்பை ஹோட்டலில் தங்கியுள்ள கர்நாடக எம்.எல்ஏக்களை அமைச்சர் சிவகுமார் சந்திக்க போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
 | 

எம்.எல்.ஏக்களை சந்திக்க அமைச்சருக்கு அனுமதி மறுப்பு 

மும்பை ஹோட்டலில் தங்கியுள்ள கர்நாடக எம்.எல்ஏக்களை அமைச்சர் சிவகுமார் சந்திக்க போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். 

கர்நாடக அரசியலில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனிடையே ராஜினாமா செய்த 10 கர்நாடக எம்.எல்.ஏக்கள் மும்பையில் உள்ள ரெனாய்சான்ஸ் ஹோட்டலில் தங்கியுள்ளனர். இவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைச்சர் சிவகுமார் இன்று மும்பை ஹோட்டலுக்கு சென்றார். 

ஆனால், அமைச்சர் சிவகுமார் வருகையால் அச்சுறுத்தல் ஏற்படும் என 10 எம்.எல்.ஏக்களும் போலீசாரிடம் தெரிவித்துள்ளதால், அமைச்சர் எம்.எல்.ஏக்களை சந்திக்க போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். ஹோட்டலுக்கு செல்ல மட்டுமே அமைச்சர் சிவகுமாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP