ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்தக்கூடும்- உளவுத்துறை எச்சரிக்கை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அல்குவைதா தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்கள் நடத்த கூடும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.
 | 

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்தக்கூடும்- உளவுத்துறை எச்சரிக்கை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அல்குவைதா தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்கள் நடத்த கூடும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜூலை 1ம் தேதி தொடங்கவுள்ள அமர்நாத் யாத்திரையின் போது அல்லது அதற்கு முன்னதாக அல்குவைதா தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிழக்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அல்லது அவந்திபுரா தாக்குதல்கள் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

சமீபத்தில் சாகீர் முசா என்ற தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டைதயடுத்து தாக்குதல் நடத்த அல்குவைதா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அவர்களின் உரையாடல்களை இடைமறித்து கேட்டுள்ள உளவுத்துறை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP