1000 லிட்டர் மதுவை எலிகள் குடித்து விட்டது- உத்தரப்பிரதசே போலீஸ்

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி மாகாண கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 1000லிட்டர் மதுவை எலிகள் குடித்து விட்டதாக போலீசார் தெரிவித்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
 | 

1000 லிட்டர் மதுவை எலிகள் குடித்து விட்டது- உத்தரப்பிரதசே போலீஸ்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ‌பறிமுதல் செய்யப்பட்டு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ஆயிரம் லிட்டர் மதுவை எலிகள் குடித்து தீர்த்து விட்டதாக போலீசார் தெரிவித்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
 
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி மாகாண கண்டோன்மெண்ட் போலீஸ் நிலைய எல்லைக்குள் சட்டவிரோதமாக கடத்தி வரப்படும் விஸ்கி, பிராந்தி, ரம் உள்ளிட்ட மதுவகைகள் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலைய குடோனில் வைக்கப்படும். 

மதுவின் மாதிரி எடுத்து வைக்கப்பட்ட பின்னர், மீதமுள்ள மது சாக்கடையில் ஊற்றப்படும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக மது சாக்கடையில் கொட்டப்படாமல் பிளாஸ்டிக் கேன்களின் வைக்கப்பட்டது. இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று ஓர் அதிகாரி தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். 

தற்போது இந்த பிளாஸ்டிக் கேன்களில் சிறிய ஓட்டைகள் காணப்படுகின்றன. எலிகள் 1000 லிட்டர் மதுவையும் ஓட்டை போட்டு உள்ளே புகுந்து குடித்துவிட்டன என போலீசார் தெரிவித்துள்ள சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP