சுரங்க விபத்து: மேகாலயா அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்!

மேகாலயத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் நிலக்கரி சுரங்கங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறியதற்காக, அந்த மாநில அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
 | 

சுரங்க விபத்து: மேகாலயா அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்!

வடக்கிழக்கு மாநிலமான மேகாலயத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் நிலக்கரி சுரங்கங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறியதற்காக, அந்த மாநில அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

நிலக்கரி சுரங்கங்களை சட்டவிரோதமாக நடத்துவோர் மற்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளிடமிருந்து இந்தத் தொகையை இரண்டு மாதங்களுக்குள் வசூலித்து, அதனை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அளிக்க வேண்டும் எனவும் தீர்ப்பாயம் தமது உத்தரவில் தெரிவித்துள்ளது.

மேகாலயாவின் கசன் பகுதியில் இயங்கிவரும் நிலக்கரி சுரங்கத்துக்குள், 15 தொழிலாளர்கள் கடந்த மாதம் 13 -ஆம் தேதி சிக்கிக் கொண்டனர். கிட்டத்தட்ட ஒரு மாதமாக அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP