பணம் கேட்டு மிரட்டிய மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை!

கேரள மாநிலத்தில் சொகுசு விடுதி ஒன்றில் (ரிசார்ட்) தங்கியிருந்தவர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு, பணம் கேட்டு மிரட்டிய மாவோயிஸ்ட்டை அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றனர்.
 | 

பணம் கேட்டு மிரட்டிய மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை!

கேரள மாநிலத்தில் சொகுசு விடுதி (ரிசார்ட்) ஒன்றில் தங்கியிருந்தவர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு, பணம் கேட்டு மிரட்டிய மாவோயிஸ்ட்டை அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றனர்.

கேரள மாநிலம், வயநாடு அருகே வைத்திரி எனுமிடத்தில் உள்ள ரிசாட்டில், மாவோயிஸ்ட் கும்பல் ஒன்று நேற்றிரவு திடீரென புகுந்தது.
அங்கிருந்தவர்களை துப்பாக்கி முனையில் பணயக் கைதிகளாக பிடித்த அவர்கள், பல லட்சம் ரூபாய் பணம் கேட்டு  ரிசார்ட் நிர்வாகத்தை மிரட்டியுள்ளனர்.

தகவலறிந்து அங்கு சென்ற கேரள அதிரடிப்படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டான். தப்பியோடியவர்களை போலீஸாரை தேடி வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP