மனநோயாளியாக மாறிவிட்டார் மம்தா பானர்ஜி- விஜய் ரூபானி அதிரடி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மனநோயாளியாக மாறி விட்டார் என்று குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
 | 

மனநோயாளியாக மாறிவிட்டார் மம்தா பானர்ஜி- விஜய் ரூபானி அதிரடி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மனநோயாளியாக மாறி விட்டார் என்று குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி கருத்துதெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் அமித் ஷா நடத்திய பேரணியின் மீது திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். மேலும் அந்த மாநிலத்தின் பெரும் அறிஞர் எனப் போற்றப்படும் வித்யாசாகரின் சிலையையும் மம்தா கட்சித் தொண்டர்கள் உடைத்து சேதப்படுத்தினர். ஆனால் வன்முறைக்கு பாஜக கட்சியினரே காரணம் என மம்தா குற்றஞ்சாட்டினார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்நிலையில் வதோதராவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, சமீப காலமாக மம்தா பானர்ஜி மனநேயாளாகியாக மாறியுள்ளார் என்றும்அவருடைய செல்வாக்கை அவர் இழந்து விட்டார் என்று குறிப்பிட்டார்.

மேலும் தேர்தல் முடிவுகள் மம்தாவுக்கு சரியான பாடத்தை புகட்டும் என்று குறிப்பிட்ட அவர், தனது செய்கையால் அவர் ஜனநாயகத்தை படுகொலை செய்து  வருகிறார் என்றும் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கருத்து தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP