Logo

மம்தா கட்சி எம்.பி.யின் ரூ.238 கோடி சொத்துக்கள் முடக்கம்!

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற நிதி மோசடி தொடர்பான வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யான கே.டி. சிங்கின் 238 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத் துறை இன்று முடக்கியுள்ளது.
 | 

மம்தா கட்சி எம்.பி.யின் ரூ.238 கோடி சொத்துக்கள் முடக்கம்!

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற நிதி மோசடி தொடர்பான வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யான கே.டி. சிங்கின் 238 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை இன்று முடக்கியுள்ளது.

முடக்கப்பட்ட சொத்துக்களில் குஃப்ரி பகுதியில் உள்ள எம்.பி.க்கு சொந்தான சொகுசு பங்களா, சண்டீகரில் உள்ள ஆடைகள் விற்பனையகம், ஹரியாணாவில் உள்ள அவரது சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் ஆகியவை அடங்கும்.

முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி,  சங்கிலித் தொடர் நிதி முதலீட்டுத் திட்டம் மேற்கு வங்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் பெருமளவு மோசடி நடைபெற்றதாக புகார்கள் எழுந்தது. 

இதையடுத்து ஆளும் திரிணமூல் காங்கிரஸின்  சில எம்.பி.க்கள் உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP