பிரதமரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கபோவதில்லை : மம்தா பானர்ஜி

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கபோவதில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
 | 

பிரதமரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கபோவதில்லை : மம்தா பானர்ஜி

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கபோவதில்லை என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு  விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் கலவரத்தில் பாஜகவினர் 54 பேர் கொல்லப்பட்டதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

இlதுதொடர்பாக, மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறும்போது, "பிரதமர் நரேந்திர மாேடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முடிவு செய்திருந்தேன். ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் கலவரத்தின்போது பாஜகவினர் 54 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அக்கட்சி கூறியுள்ளது உண்மைக்கு புறம்பானது. இதன் காரணமாக, பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளக் கூடாது" என முடிவு செய்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதாக அறிவித்த 24 மணிநேரத்துக்குள் தமது முடிவை மம்தா மாற்றி கொண்டுள்ளதன் மூலம் அவர் யாரை புறக்கணிக்கிறார்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரையா?  50சதவீதத்துக்கும் மேல், பாஜகவுக்கு வாக்களித்த வாக்காளர்களையா? அல்லது ஜனநாயகத்தையா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP