Logo

மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் திருப்பம்: தேசியவாத காங். பிளவு!

மகாராஷ்டிராவில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவை ஆதரிக்கவில்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளதால் மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
 | 

மகாராஷ்டிராவில் பாஜக - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ள நிலையில், " மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது, அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவு அல்ல. அவருடைய இந்த முடிவை தேசிய காங்கிரஸ் கட்சி ஆதரிக்கவில்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதனால், கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது என்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது. 

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் என்ற அடிப்படையில் அஜித்பவார் ஆதரவு அளித்திருப்பதாகவும், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சார்பில் அஜித்பவார் ஆதரவு கடிதம் அளித்ததால் பதவியேற்பு நடந்ததாகவும் பாஜக விளக்கம் அளித்துள்ளது. மேலும், 170 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளதால் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என பாஜகவை சேர்ந்த கிரிஷ்மகாஜன் தெரிவித்துள்ளார்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP