மஹாராஷ்டிரா- நக்சல்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு

மஹாராஷ்டிர மாநிலத்தில் நக்சல்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில், அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
 | 

மஹாராஷ்டிரா- நக்சல்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு

மஹாராஷ்டிர மாநிலத்தில் நக்சல்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில், அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

மஹாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி பகுதியில் உள்ள கபோரி கோயன் வனப்பகுதியில் போலீசார் நக்சல்களை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது நக்சல்கள் ஒரு இடத்தில் பதுங்கியிருப்பதை பார்த்த போலீசார் நக்சல்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். நக்சல்களும் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

ஒரு கட்டத்தில் போலீசாரின் தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாமல் நக்சல்கள் அங்கிருந்து தப்பித்து சென்றனர். இதையடுத்து அப்பகுதியில் நக்சல்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP