மகாராஷ்டிரா: ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
 | 

மகாராஷ்டிரா: ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் துலேவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்டதையடுத்த தொழிலாளர்கள் வெளியே வந்ததாக தெரிகிறது. இதில் 8 தொழிலாளர்கள் உள்ளே சிக்கி கொண்ட நிலையில், அவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என்ற அச்சம் நிலவியுள்ளது. 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். 

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ரசாயன ஆலை என்பதால் தீ மேலும் பரவி வருகிறது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP