Logo

மத்திய பிரதேசம்- கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சையளிக்க மறுத்த அரசு மருத்துவமனை

மத்திய பிரதேசத்தில் ஒரு அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 | 

மத்தியபிரதேசத்தின் தாமோ மாவட்டத்தில் டெண்டு கடே அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அந்த மருத்துவமனையில் பணியாற்றுபவர்கள் அந்த கர்ப்பிணி பெண்ணின் கணவரிடம் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்த பிறகே சிகிச்சை தொடங்கும் என்று கூறிவிட்டனர். 

இதனால் என்ன செய்வதென்று தெரியாத அந்த பெணின் கணவர், அவரது மனைவியை வேறு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். தற்போது அந்த அரசு மருத்துவமனை நிர்வாகிகள் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். ஆனால் அந்த பெணின் உறவினர்கள் அந்த மருத்துவமனையில் வேலை செய்யும் பணியாளர்கள், பணம் கேட்டதாகத் தெரிவித்து புகார் எழுப்பியுள்ளனர்.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP