ம.பி. வீட்டில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து 3 பேர் பலி

மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு வீட்டில் குண்டுகள் தொடர்ந்து வெடித்ததில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
 | 

ம.பி. வீட்டில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து 3 பேர் பலி

மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு வீட்டில் குண்டுகள் வெடித்ததில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி நகரில் உள்ள கனியதானா என்ற பகுதியில் உள்ள வீட்டில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவம் நடந்த வீட்டில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த குடும்பத்தை சேர்ந்த சிலர் அருகில் உள்ள ராணுவ பயிற்சி முகாமிற்கு சென்று  கேட்பாரற்று கீழே கிடக்கும் சில இரும்பு பொருட்களை கொண்டு வந்து வீட்டில் வைத்து, காயலான் கடையில் எடைக்கு விற்பனை செய்யும் வழக்கம் உள்ளவர்கள் என்பது தெரிய வந்தது.

மேலும் அவ்வாறு எடுத்து வந்த இரும்பு பொருட்களில் வெடிகுண்டுகளும் இருப்பது அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. இதனால் வீட்டில் இருந்த இரும்பு பொருட்களை ஒழுங்கு படுத்த முயற்சிக்கையில், அதிலிருந்த வெடிகுண்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதினால் ஏற்பட்ட அதிர்ச்சி தாளாமல் அடுத்தடுத்து வெடித்ததில் வீட்டிலிருந்த 3 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP