Logo

ஃபானி குழந்தை பாருங்க...!

காலை சுமார் 11.03 மணியளவில் அங்குள்ள ரயில் பெட்டி சீரமைக்கும் பணிமனையில் வேலை செய்யும் உதவியாளரின் மனைவிக்கு ரயில்வே மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையும் தாயும் நலமாக உள்ளனர்.
 | 

ஃபானி குழந்தை பாருங்க...!

ஒடிசா கடற்பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) புயல் தாக்கியபோது தலைநகர் புவனேஸ்வர் அருகேயுள்ள மான்செஷ்வாரில் உள்ள ரயில்வே மருத்துவமனையும் சேதமடைந்தது. 

காலை சுமார் 11.03 மணியளவில் அங்குள்ள ரயில் பெட்டி சீரமைக்கும் பணிமனையில் வேலை செய்யும் உதவியாளரின் மனைவிக்கு ரயில்வே மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையும் தாயும் நலமாக உள்ளனர். 

பானி புயல் தாக்கியபோது பிறந்த அந்த குழந்தையை `பெண் ஃபானி’ என டாக்டர்கள் அழைக்கின்றனர்.  அந்த தாய்க்கு பிறந்த முதல் குழந்தை இது.  புயல் தாக்கியதில் மருத்துவமனை சேதமடைந்த நிலையில் கூட தாய்க்கும் சேய்க்கும் எந்த பாதிப்பும் இல்லை. 

ஃபானி என்றால் பாம்பு அல்லது பாம்பு உடை என்பது பொருளாம்.  இந்த வார்த்தையை வங்கதேசம் உருவாக்கியதாக இந்திய வானிலைத் துறை கூடுதல் இயக்குனர் மிருன்செய் முகப்பத்ரா தெரிவித்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP