உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு !

சண்டிகரில் உள்ள சத்பீர் உயிரியல் பூங்காவில் இரு சிங்கங்கள் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த நபர் சிங்கங்கள் இருந்த இடத்திற்கு எப்படி சென்றார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 | 

சண்டிகரில் உள்ள மொஹாலி மாவடத்தில் சத்பீர் உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சிங்கங்கள் இருக்கும் இடத்தில் ஒருவர் எப்படியோ நுழைந்துள்ளார். அவர் சென்ற இடத்தில் இரண்டு சிங்கங்கள் இருந்துள்ளன. அவை அந்த நபரை பார்த்தும் சுமார் 10 நிமிடங்கள் அவரை தாக்கி கடித்துக் குதறியுள்ளது. படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு !1

12 அடி உயர சுவர் மற்றும் சுவற்றுக்கு மேல் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டும், பாதுகாவலர்கள் இருந்தும் அவர் எப்படி சிங்கங்கள் இருக்கும் இடத்திற்கு சென்றார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
இந்நிலையில், சிங்கங்கள் இருக்கும் இடத்திற்கு பார்வையாளர்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP