கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்- தேவகவுடா எச்சரிக்கை

தங்களை கேட்காமல் காங்கிரஸ் தன்னிச்சையாக முடிவு எடுப்பதால் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என்று தேவேகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடகத்தில் ம.ஜ.த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
 | 

கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்- தேவகவுடா எச்சரிக்கை

தங்களை கேட்காமல் காங்கிரஸ் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து வருவதால் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என்று மதசார்பற்ற ஜனதாதள கட்சித் தலைவர் தேவேகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கர்நாடகத்தில் மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அவ்வப்போது கூட்டணியில் பல்வேறு பிரச்சினைகளால் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.

தற்போது தங்களை கேட்காமல் காங்கிரஸ் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து வருவதாக மதசார்பற்ற ஜனதாதள கட்சி தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதையடுத்து காங்கிரஸ் கட்சி நிர்வாகத்துக்கு மதசார்பற்ற ஜனதாதள. கட்சி தலைவர் தேவேகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசு நிர்வாகத்தில் கூட்டணி கட்சியாக எங்களை கலந்து ஆலோசிக்காமல் காங்கிரஸ் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து வருகிறது. இந்தப் போக்கு நீடித்தால் நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற நேரிடும் என்று தேவகவுடா வெளிப்படையாக, காங்கிரஸ் நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP