Logo

கத்துவா சிறுமி பலாத்கார வழக்கு : சிறப்பு விசாரணை குழுவை சேர்ந்த 6 பேரை விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!!

கத்துவா சிறுமி பலாத்கார வழக்கை விசாரித்த சிறப்பு விசாரணை குழுவை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளுமாறு, காஷ்மீர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது பதான்கோட் நீதிமன்றம்.
 | 

கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம், காஷ்மீர் மாநிலம் கத்துவா நகரில், குஜ்ஜர் எனப்படும் முஸ்லிம் நாடோடிகள் சமூகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆசிஃபா பானு, பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து, அவ்வழக்கை விசாரித்த பதான்கோட் நீதிமன்றம், இந்த ஆண்டின் ஜூன் மாதம், 6 பேரை குற்றவாளிகள் என்ற தீர்ப்பளித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து, இந்த வழக்கின் சாட்சிகளான சச்சின் ஷர்மா, நீரஜ் ஷர்மா மற்றும் சுஷில் ஷர்மா ஆகிய மூவரையும் விசாரித்த  சிறப்பு விசாரணை குழு, அவர்களை உடல்ரீதியாக துன்புறுத்தியதாகவும், பொய் சாட்சி கூறுமாறு மிரட்டியதாகவும், இம்மூவரும் நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்துள்ளனர்.

இவர்களின் வழக்கை விசாரித்த ஜம்மு மாநில மாஜிஸ்டிரேட் பிரேம் சாகர், இந்த சாட்சிகளை விசாரித்த சிறப்பு விசாரணை குழுவை சேர்ந்த ஆறு பேரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளுமாறு காஷ்மீர் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP