மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கேரளா முதலமைச்சர்!

கேரள மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.
 | 

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கேரளா முதலமைச்சர்!

கேரள மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார். 

கேரளாவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 102 பேர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். மேலும், வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கேரள மக்களுக்கு உதவும் வகையில் மு.க.ஸ்டாலின் திமுக சார்பில் கேரளாவுக்கு லாரிகள் மூலம் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைத்தார். 

இந்நிலையில், சகோதரத்துவ அன்பின் வெளிப்பாடாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் லாரிகளில் நிவரண பொருட்களை அனுப்பி வைத்தமைக்கு நன்றி என்றும் தமிழக சகோதர சகோதரிகளின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நாங்கள் தலைவணங்குகிறோம் எனவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் முகநூலில் பதிவிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP