குளிர்காலத்தையொட்டி கேதர்நாத் சிவன் கோவில் மூடல்!

இமயமலையில் உள்ள கேதர்நாத் சிவன் கோவில் தளங்கள் குளிர்காலம் ஆரம்பித்ததையடுத்து மூடப்பட்டுள்ளன.
 | 

குளிர்காலத்தையொட்டி கேதர்நாத் சிவன் கோவில் மூடல்!

இமயமலையில் உள்ள கேதர்நாத் சிவன் கோவில் தளங்கள் குளிர்காலம் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து மூடப்பட்டுள்ளன. 

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டடத்தில் இமயமலைத் தொடரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கேதர்நாத் சிவனை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வருவது வழக்கம்.
இந்த கோவில் குளிர்காலங்களில் பனிப்பொழிவு காரணமாக சுமார் 6 மாதங்கள் மூடப்பட்டு இருக்கும். அந்த வகையில், தற்போது குளிர்காலம் ஆரம்பித்ததையடுத்தும், பனிப்பொழிவு அதிகரித்திருப்பதாலும் கோவில் தளங்கள்  மூடப்பட்டுள்ளன. குளிர்காலம் முடிந்த பிறகே மீண்டும் கேதர்நாத் சிவன் கோவில் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP