காஷ்மீர்- தீவிரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டது

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் பீரங்கிப் பிரிவு முகாம் மீது தீவிரவாதிகள் நிகழ்த்தவிருந்த தாக்குதல் திட்டத்தை, ராணுவ வீரர்கள் முறியடித்தனர்.
 | 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி அருகே ராணுவத்தின் பீரங்கிப் பிரிவு முகாம் உள்ளது. அங்கு இன்று அதிகாலை 3 மணி அளவில் மர்மநபர்கள் சிலரது நடமாட்டம் இருந்ததை பாதுகாப்புப் படை வீரர்கள் கவனித்தனர். 

சற்றும் தாமதிக்காமல் அவர்களை நோக்கி வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதைத் தொடர்ந்து கூடுதல் வீரர்களும், ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையினரும் முகாமுக்கு வரவழைக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதிலும் சல்லடை போட்டு வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த இருவரை, அவர்கள் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP