காஷ்மீர்- பயங்கரவாதி சுட்டுக்காெல‌ை‌

காஷ்மீர் மாநிலத்தில் இன்று பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்காெல்லப்பட்டான்.
 | 

காஷ்மீர்- பயங்கரவாதி சுட்டுக்காெல‌ை‌

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளும் அத்து மீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட சவுதரி பாக் கிராமத்தை ஒட்டியுள்ள பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று வழக்கம்போல் வாகனங்களில் சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, அவ்வழியாக வந்த சில பயங்கரவாதிகள் இயந்திர துப்பாக்கிகளால் ரோந்து வாகனத்தின் மீது சரமாரியாக சுட்டனர். பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற இந்ததுப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகளில் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP