Logo

சுற்றுலாப்பயணிகளை வரவேற்கும் காஷ்மீர் மாநில அரசு!!!

கடந்த ஆகஸ்ட் முதல், இந்தியாவின் முக்கிய சுற்றுதலமான ஜம்மு காஷ்மீரில், சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிமாநில ஆட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, அப்பகுதியில், சுற்றுலா மேற்கொள்ள, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
 | 

ஜம்மு காஷ்மீர் பகுதியில், பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து வந்த நிலையில், அம்மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெற பட்டதை தொடர்ந்து, அவர்களின் ஊடுருவல்களும், தாக்குதல்களும் அதிகரித்து மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது. இதை தொடர்ந்து, அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, இந்தியாவின் மிக முக்கிய தலமான ஜம்மு காஷ்மீர் பகுதியில், வெளிமாநில மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையல், தற்போது தாக்குதல்கள் குறைந்து, ஜம்மு காஷ்மீர் பகுதியில் இயல்பு நிலை திரும்பி வருவதால், அம்மாநிலத்தின் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் சுற்றுலாவை மீண்டும் தொடர மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீரில் ஒரு நாளைக்கு 20,000 முதள் 25,000 வரை சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், சமீபத்திய 2 மாத தடை அம்மாநில பொருளாதாரத்தை  பெரிதளவு பாதித்திருப்பதாகவும் கணக்கெடுப்புகள் கூறுகின்றன.

மக்களின் பாதுகாப்பிற்காக சில தடைகளை விதித்திருந்த மத்திய அரசு, தற்போது ஒவ்வொரு தடையாக நீக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP