காஷ்மீர்- 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீரில் மாநிலத்தில் இன்று காலை முதல் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
 | 

காஷ்மீர்- 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை முதல் தீவிரவாதிகளுக்கும் பாதுப்புப் படையினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளும் அத்து மீறி இந்திய நிலைகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பாதுகாப்புப் படையினர் தரப்பிலிருந்து தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில்  இன்று காலை காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து  அங்கு முகாமிட்டு அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதையடுத்து பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி தரப்பட்டது.  அதிகாலை முதல் நீண்ட நேரம் நடைபெற்ற இந்தத் தொடர் தாக்குதலின் இறுதியில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதையடுத்து தீவிரவாதிகள் பதுங்கியிருந்த மறைவிடத்திலிருந்து ஏராளமான ஆயுதங்களை பாதுகாப்பு வீரர்கள் கைப்பற்றியுள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP