கர்நாடகா: வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா!

கர்நாடகா மாநிலத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூரு சென்றார்.
 | 

கர்நாடகா: வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா!

கர்நாடகா மாநிலத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூரு சென்றார். 

கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. வீடுகள், விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும், சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா மத்திய அரசிடம்  வெள்ள நிவாரணம் கோரியுள்ளார். 

கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவின் கோரிக்கையை ஏற்று வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பெங்களூரு சென்றுள்ளார். அங்கு வெள்ளப் பாதிப்புகளை மத்திய குழுவுடன் சேர்ந்து ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொள்கிறார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP