Logo

கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி கலைப்பு!

கர்நாடக மாநிவ காங்கிரஸ் கமிட்டியை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதிரடியாக கலைத்து உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது.
 | 

கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி கலைப்பு!

கர்நாடக காங்கிரஸ் கமிட்டியை கலைப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. முதல்வராக ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவே கௌடாவின் மகன் குமாரசாமி பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தலைமைக்கு புகார்கள் சென்றன.

கர்நாடக முதல்வர் குமாரசாமி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, நான் தினமும் எண்ணற்ற பிரச்சைகளை சந்தித்து வருகிறேன். அதை வெளியே சொல்ல முடியவில்லை. இருந்தும் மக்கள் பிரச்சினைகளை நான் தீர்க்க வேண்டும்.

கூட்டணி ஆட்சி சுமூகமாக நடைபெற வேண்டும் என நான் விரும்புகிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் கர்நாடக மாநிலத் தலைவர் மற்றும் செயல் தலைவர் பதவியை தவிர அனைத்து நிர்வாகிகளின் பொறுப்புகளையும் கலைத்து விட்டதாக காங்கிரஸ் மேலிடம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP