Logo

கர்நாடகா: பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 60க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!

கர்நாடகா மாநிலத்தில் ஆரம்ப பள்ளி ஒன்றில் மத்திய உணவு உட்கொண்ட 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 | 

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஆரம்பப்பள்ளி ஒன்றில் நேற்று 125 மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. மதிய உணவு சாப்பிட்ட 60க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிறிது நேரத்திலேயே வாந்தி, மயக்கம் மற்றும் வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உணவு சமைப்பவர்களின் அலட்சியத்தால் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களில் ஒருவர் உணவில் இறந்த பல்லியை கண்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து உணவு மாதிரி விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதே பள்ளியில் மதிய உணவை சாப்பிட்ட பல மாணவர்கள் நோய்வாய்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மீண்டும் அதே போன்ற சம்பவம் அரங்கேறியிருப்பது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான மாணவர்கள் நேற்றிரவு தரையில் தூங்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP