கர்நாடகா: காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா

கர்நாடக மாநிலம் விஜய நகர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த் சிங் இன்று அவருடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 | 

கர்நாடகா: காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா

கர்நாடக மாநிலம் விஜய நகர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த் சிங் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. குமாரசாமி முதல்வராக உள்ளார்.

மக்களவை தேர்தலில் தோல்வியை சந்தித்த பின் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளுக்கிடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் விஜயநகர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகரிடம் கே.ஆர்.ரமேஷ்குமாரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் அளித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP