பீஹார்- கிரிராஜ் சிங்கை எதிர்த்து கன்னையா குமார் போட்டி

ஜேஎன்யு மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை எதிர்த்து போட்டியிடுகின்றார்.
 | 

பீஹார்- கிரிராஜ் சிங்கை எதிர்த்து கன்னையா குமார் போட்டி

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை எதிர்த்து போட்டியிடுகின்றார்.

பீஹார் மாநிலத்தில் நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரீய ஜனதா தளம் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி பீஹாரில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ராஷ்டிரீய ஜனதா தளம் 20 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும் போட்டியிடவுள்ளது. 

இந்நிலையில், பீஹாரின் பெகுசராய் தொகுதியில் ஜேஎன்யு மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. பாட்னாவில் இன்று நடைபெற்ற கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெகுசராய் தொகுதியில் பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP