கட்சிக் கூட்டத்துக்கு ஹெல்மெட் அணிந்து சென்ற பத்திரிகையாளர்கள்!

சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் நேற்றிரவு நடைபெற்ற பாஜக தலைவர்களின் கூட்டத்துக்கு, பத்திரிகையாளர்கள் தலைகவசம் (ஹெல்மெட்) அணிந்து சென்றனர்.
 | 

சக பத்திரிகையாளர் ஒருவர் தாக்கப்பட்டதற்கு தங்களது எதிர்ப்பை அவர்கள் இவ்வாறு நூதனமான முறையில் வெளிப்படுத்தியுள்ளனர்.

ராய்ப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக மாவட்ட தலைவர்களின் கூட்டத்துக்கு செய்தி சேகரிக்க சென்ற நிருபர் சுமன் பாண்டேவை, பாஜக நிர்வாகிகள்  சிலர் சேர்ந்து தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக அவர் அளித்த  புகாரின் அடிப்படையில், பாஜகவின் ராய்ப்பூர் நகர தலைவர் ராஜீவ் அகர்வால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP