தேர்தலில் போட்டியிட போவதில்லை - ஜம்மு காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் !!

ஜம்மு காஷ்மீரில், உள்ளாட்சித்தேர்தல் நடக்கவிருப்பதை தொடர்ந்து, ஜம்முவில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், காஷ்மீர் தலைவர்களும் விடுவிக்கப்படாமல், தேர்தலில் போட்டியிட போவதில்லை என ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
 | 

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதை தொடர்ந்து, பொது பாதுகாப்பிற்காகவும், சட்ட ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், பல தலைவர்களை வீட்டுக்காவலில் வைக்கும்படி மத்திய அரசு உத்திரவு பிறப்பித்திருந்தது. இதனடிப்படையில், 60 நாட்களுக்கும் மேலாக,  ஃபரூக் அப்துல்லா, அவரது மகன் ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி உட்பட பல தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த செப் 29., ஆம் தேதி, அம்மாநிலத்திற்கான உள்ளாட்சித்தேர்தல், வரும் அக்டோபர் 24 ஆம் தோதி, நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஜம்முவில், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

இதை தொடர்ந்து, காஷ்மீரின் தலைவர்கள் எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்ற கேள்விக்கு, ஆளுநர் சத்யபால் மாலிக்கின் ஆலோசகர் ஃபரூக் கான், "ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதை தொடர்ந்து, பொது பாதுகாப்பிற்காக பல தலைவர்களை வீட்டுக்காவலில் வைக்கும் சூழல் உருவாகியது. தற்போது நிலைமை சீரடைந்து வருவதால், ஜம்முவை போல் காஷ்மீரின் தலைவர்களும், ஒவ்வோருவராக விடுவிக்கப்படுவார்கள்" என பதிலளித்திருந்தார்.

ஆனால், தேர்தல் நாள் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், காஷ்மீர் தலைவர்கள் எப்போது விடுவிக்கப்படுவர் என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள், காஷ்மீர் தலைவர்கள் விடுவிக்கப்படும் வரை தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP