ஜம்மு காஷ்மீா்- தீவிரவாதிகள் 2 போ் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
 | 

ஜம்மு காஷ்மீா்- தீவிரவாதிகள் 2 போ் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சோபியான் மாவட்டத்தில் உள்ள இமாம் ஷாஹிப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதியில் ரோந்து சென்ற பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் பதுங்கி இருந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால், உஷாரான பாதுகாப்பு படையினர், அப்பகுதியை சுற்றிவளைத்தனர்.

இதனைத்தொடர்ந்து, தீவிரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து வெடிப்பொருட்கள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

மேலும், என்கவுண்டர் நடந்து வரும் அப்பகுதியில் மொபைல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, பாதுகாப்புபடையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP