ஜம்மு காஷ்மீர் பஞ்சாயத்து தேர்தல் - 7ம் கட்ட வாக்கு பதிவு

ஜம்மு காஷ்மீர் பஞ்சாயத்து தேர்தலுக்கான 7-ம் கட்ட வாக்குப் பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 | 

ஜம்மு காஷ்மீர் பஞ்சாயத்து தேர்தல் - 7ம் கட்ட வாக்கு பதிவு

ஜம்மு காஷ்மீர் பஞ்சாயத்து தேர்தலுக்கான  7-ம் கட்ட வாக்குப் பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு 9 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி 6 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்று 7ம் கட்ட வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மதியம் 2 மணி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 2,714 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

newstm.tv

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP