Logo

ஜம்மு காஷ்மீர்- எல்லையில் தலைகீழாக பறந்த பாகிஸ்தான் கொடி

போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இந்திய பகுதியில் தாக்குதல் நடத்தியதற்கு தகுந்த பதிலடியாக பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கிருந்த சாவடி தரைமட்டமாக்கப்பட்டது. இறந்தவர்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை.
 | 

ஜம்மு காஷ்மீர்- எல்லையில் தலைகீழாக பறந்த பாகிஸ்தான் கொடி


ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாபூர் மற்றும் கெமி பகுதிகளில் நேற்று மாலை பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இந்திய  பகுதியில் தாக்குதல் நடத்தியது. 

இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது. இந்த சண்டை இரு தரப்பிலும் நள்ளிரவிலும் தொடர்ந்து நடைபெற்றது. பாகிஸ்தான் படைகள், இந்திய முகாம்கள்  மற்றும் கிராமங்கள் மீது சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் பீரங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் ராணுவத்துடன் நடத்திய தாக்குதலின் போது, இன்று  இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். சக வீரர்கள் அவரை உடனே ராணுவ  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

தொடர்ந்து இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் அக்னூர் பிரிவில் பாகிஸ்தான் தளம் ஒன்று அழிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றிய  வீடியோ ஒன்றையும் இந்திய ராணுவம் வெளியிட்டு உள்ளது. அதில், அந்நாட்டின் தேசிய கொடி தலைகீழாக பறக்கிறது. இது தீவிர ஆபத்தின் அடையாளம் என ராணுவ வட்டாரம்  தெரிவித்து உள்ளது.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP