ஜம்மு காஷ்மீர்- தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முக்கிய தீவிரவாத அமைப்பின் தலைவர் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
 | 

ஜம்மு காஷ்மீர்- தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முக்கிய தீவிரவாத அமைப்பின் தலைவர் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் தத்சாரா கிராமத்தில் உள்ள டிரால் பகுதியில் அன்சர் உல் ஹிந்த் தீவிரவாத அமைப்பின் தலைவர் சாகீர் மூசா ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் குறிப்பிட்ட அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். பின்னர் மூசாவை சரணடையுமாறு அறிவுறுத்தினர். ஆனால் மூசா சரணடையாமல் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.

பதிலுக்கு பாதுகாப்பு படையினர் மூசா பதுங்கியிருந்த வீட்டை வெடிகுண்டு வைத்து தகர்த்தனர். அப்போது அங்கிருந்த தப்பிக்க முயன்ற மூசாவை பாதுகாப்பு படையினர் இன்று காலை சுட்டுக்கொன்றனர்.

மேலும் அங்கிருந்து ஏராளமான ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.  இதையடுத்து அப்பகுதியில் இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP