ஜம்மு காஷ்மீர்- 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
 | 

ஜம்மு காஷ்மீர்- 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம்  அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பிதூரா என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற ராணுவ வீரர்கள் மீது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பதிலுக்கு ராணுவ வீரர்களும் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மேலும் ஒரு ராணுவ அதிகாரி உள்பட 3 வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு துப்பாக்கிச் சண்டை  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP