வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் கடும் குளிர்

வடமாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. டெல்லி, பீகார், உத்தரப்பிரதேசம், குஜராத், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உறைய வைக்கும் அளவுக்கு குளிர் காற்று வீசி வருகிறது.
 | 

வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் கடும் குளிர்

வடமாநிலங்களில் வாழ்ந்து வரும் மக்களை குளிர் வாட்டி வதைத்து வருகிறது. பீகாரில் குளிர்தாங்க இயலாமல் காவலர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வடமாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. டெல்லி, பீகார், உத்தரப்பிரதேசம், குஜராத், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உறைய வைக்கும் அளவுக்கு குளிர் காற்று வீசி வருகிறது. மேலும் கடுமையான பனி மூட்டமும் நிலவி வருகிறது.

குஜராத் தலைநகர் காந்திநகரில் 6.8 டிகிரி செல்சியசாக வெப்ப நிலை பதிவானதால் மக்கள் குளிரில் நடுங்கி துன்பத்தில் ஆழ்ந்தனர். இதனால் அவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். ஆமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட் மற்றும் பவன் நகர் ஆகிய இடங்களில் இதே நிலை நீடித்து வருகிறது. இன்று 2 அல்லது 3 டிகிரி செல்சியசாக வெப்ப நிலை மேலும் குறைவாக பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

அதேபோல் உத்தரபிரதேச மாநிலத்தில் முசாபர்நகர் உள்ளிட்ட நகரங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதோடு, அங்கு 1.0 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது. அங்கு அடுத்து வரும் 10 நாட்களுக்கு இதே நிலைமை நீடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பீகாரில் வாட்டி வதைக்கும் கடுமையான குளிர் தாங்க இயலாமல் காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.   
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP