ஆர்எஸ்எஸுக்கு தடை என்பதெல்லாம் தேர்தல் வாக்குறுதியா?- மத்திய பிரதேச காங்கிரஸுக்கு குட்டு

அரசு அலுவலகங்களில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் நுழைய தடை விதிக்கப்படும் என்று மத்தியப் பிரதேச தேர்தல் வாக்குறுதியில் காங்கிரஸ் குறிப்பிட்டிருப்பதை பாஜக விமர்சித்து வருத்தம் தெரிவிக்கவும் பாஜக கோரியுள்ளது.
 | 

ஆர்எஸ்எஸுக்கு தடை என்பதெல்லாம் தேர்தல் வாக்குறுதியா?- மத்திய பிரதேச காங்கிரஸுக்கு குட்டு

அரசு அலுவலகங்களில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் நுழைய தடை விதிக்கப்படும் என்று மத்தியப் பிரதேச மாநில தேர்தல் வாக்குறுதியில் காங்கிரஸ் குறிப்பிட்டிருப்பதை பாஜக விமர்சித்துள்ளது. 

மத்திய பிரதேசத்தில் நவம்பர் 28ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.  தேர்தல் முடிவுகள் டிசம்பர் 11 ஆம் தேதி வெளியிடப்படும்.இந்த நிலையில் வாக்குறுதிகளை அள்ளி வீசி காங்கிரஸ் கட்சி 112 பக்க தேர்தல் அறிக்கையை போபாலில் காங்கிரஸ் தலைவர் கமல் நாத், மாநில தேர்தல் பிரச்சார கமிட்டி தலைவர் ஜோதிர ஆதித்யா சிந்தியா மற்றும் முன்னாள் முதலமைச்சர் திக்விஜயா சிங் ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.  

மத்திய பிரதேசத்தில் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், பனிரெண்டாம் வகுப்பில் 70 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுப்பவர்களுக்கு லேப்டாப் மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு இலவச இருசக்கர வாகனம், வீடு கட்ட கடன், ஏழைகளுக்கு 35 கி.கி கோதுமை மற்றும் ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்க இருப்பதாகாவும் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் வியக்கவைப்பதாக, அரசு அலுவலகங்களில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களின் நடவடிக்கைகளுக்கு தடை என்றதும் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை, மாநிலத்தில் அவசர நிலையை ஏற்படுத்தும் நுணுக்கமன முயற்சி என பாஜக விமர்சித்துள்ளது.  ஆனால், இதனை பொது நிர்வாக ஒழுங்குமுறை நடவடிக்கை என காங்கிரஸ் கட்சி சமாளித்துள்ளது. 

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பேசிய திக்விஜயா சிங், ''காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு அலுவலகங்களில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும் அதேபோல, அரசு ஊழயர்கள் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என்ற உத்தரவும் திரும்ப பெறப்படும்'' என்றார். இந்த வாக்குறுதியை பாஜக தரப்பு விமர்சித்து வருகிறது. 

ஸ்ரீராமர்  கோயில் அமையக்கூடாது. ஆர்எஸ்எஸ் இயங்கக் கூடாது என்பது மட்டும் தான் காங்கிரச கட்சியின் பிரதான நோக்கமாகவும் தேர்தல் பரப்புரை மந்திரமாகவும் இருப்பதாகவும், மாநிலத்தில் அவசர நிலையை உண்டாக்கும் இது போன்ற வாக்குறுதியை கூறியதற்காக காங்கிரஸ் கட்சி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா தெரிவித்துள்ளார். மேலும், ''காங்கிரஸ் கட்சி தான் நக்சல்களை புரட்சியாளர்கள் என வர்ணித்தது. ஆர்எஸ்எஸ் தான் அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றி ராமர் கோயில் அமைக்க நினைக்கிறது. மற்றக் கட்சிகள் இதில் அரசியல் செய்கின்றன. 

அந்தக் கட்சியின் திக்விஜய் சிங், அயோத்தியை சர்ச்சைக்குரிய நிலம் என பேசி மக்களின் மனதில் தவறான நோக்கத்தை கற்பித்தவர். ஆனால் ஒசாமா பின் லேடனை, ஜி என மரியாதையுடன் அழைத்தவர் திக்விஜய் சிங். ஆர்எஸ்எஸ் கேரள வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களை மீட்க முயற்சித்தது'' எனவும் குறிப்பிட்டுள்ளார். 

மத்திய பிரதேசத்தில் 1981 ஆம் ஆண்டு இத்தகைய உத்தரவை காங்கிரஸ் கட்சி போட்டது. பின்னர் பாஜக தலைமையில் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சிக் காலத்தில், ஆர்எஸ்எஸ் அரசியல் கட்சி அல்ல, அது வெறும் சமூக கலாச்சார அமைப்பு என்றும் குறிப்பிட்டு இந்த தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP