நரேந்திர மாேடிக்கு எதிராக செயல்பட்ட ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு சிறை!

குஜராத்தில் போலீஸ் காவலில் கைதி உயிரிழந்த வழக்கில் ஐ.பி.எ.ஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 | 

நரேந்திர மாேடிக்கு எதிராக செயல்பட்ட ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு சிறை!

குஜராத்தில் போலீஸ் காவலில் கைதி உயிரிழந்த வழக்கில், ஐ.பி.எ.ஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

குஜராத் மாநிலம் ஜாம் நகரில் கடந்த 1990ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்தார். அப்போது ஜோத்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 150 பேரை கைது செய்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் பிரபுதாஸ் வைஷ்ணானி என்பவர் விடுதலைக்கு பின் உயிரிழந்தார். இதையடுத்து பிரபுதாஸின் சகோதரர் பிரபுதாஸ் விசாரணையின் போது  ஐ.பி.எ.ஸ். அதிகாரி சஞ்சீவ் பட் மற்றும் 6 போலீசார் கடுமையாக துன்புறுத்தியதால் மருத்துவமனையில் உயிரிழந்தார் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்து வந்த குஜராத் நீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் பட் மற்றும் 6 போலீசார் துன்புறுத்தியதால் பிரபுதாஸ் உயிரிழந்தார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் பட்டிற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மேலும் 6 போலீசாருக்குரிய தண்டனை விபரங்களை பின்னர் அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார். தற்போது சஞ்சய் பட் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து நடைபெற்ற கலரத்தில், அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மாேடிக்கு எதிராக, ஐந்து வகை நீதிமன்றங்களிலும் சாட்சியம் சொன்னவர் தான் இந்த அதிகாரி. ஆனால், நரேந்திர மாேடி மீதான குற்றச்சாட்டுகள் அனைத்து பொய் என நிரூபிக்கப்பட்டு அவர் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், நரேந்திர மாேடிக்கு எதிராக குற்றம்சாட்டிய மாஜி அதிகாரி, தற்போது வேறொரு கொலை வழக்கில்  சட்டத்தின் பிடியில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP