இந்தியாவின் முதல் போலீஸ் ரோபோ

இந்தியாவிலேயே முதல் முறையாக மனிதர்களை போன்ற தோற்றமுடைய போலீஸ் ரோபோவை கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.
 | 

இந்தியாவின் முதல் போலீஸ் ரோபோ

இந்தியாவிலேயே முதல் முறையாக மனிதர் போன்ற தோற்றமுடைய போலீஸ் ரோபோவை கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.

கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை காவல் நிலையத்தில் போலீஸ் ரோபோவை கேரள முதல்வர் பினராயி விஜயன், பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். இந்த ரோபோ காவல் நிலையத்தின் வரவேற்பறையில் உள்ள பணிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் நிலையத்திற்கு வரும் மக்களை சல்யூட் அடித்து வரவேற்று, காவல் நிலையத்தில் அவர்கள் உரிய இடத்திற்கு செல்ல வழி காட்டுவது அந்த போலீஸ் ரோபோவின் முக்கிய பணி ஆகும். 

செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவாக்கப்படும் தற்போதைய ரோபோக்கள், தகவல்களை சேகரிப்பது, சேகரித்த தகவல்களை பராமிப்பது, சென்சார் கொண்டு தகவல் அறிவது, கண்காணிப்பது போன்ற பல தேவைகளுக்கு பல்வேறு தொழில் நிறுவனங்களிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த போலீஸ் ரோபோவிற்கு உதவி ஆய்வாளர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP