Logo

ஆதரவை வாபஸ் பெறும் சுயேச்சைகள்: கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு!

கர்நாடக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக சுயேச்சை எம்எல்ஏ.க்களான ஹெச். நாகேஷ் மற்றும் ஆர்.சங்கர், மாநில ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.இது அந்த மாநில அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

ஆதரவை வாபஸ் பெறும் சுயேச்சைகள்: கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு!

கர்நாடக அரசுக்கு அளித்து வந்த  ஆதரவை வாபஸ் பெறுவதாக சுயேச்சை எம்எல்ஏ.க்களான ஹெச். நாகேஷ் மற்றும் ஆர்.சங்கர், மாநில ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.

காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ.க்களால், கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் சூழல் நிலவி வரும் நிலையில், புதிய திருப்பமாக, சுயேச்சை எம்எல்ஏ.க்கள் இருவர் தங்களது ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது அந்த மாநில அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து எம்எல்ஏ சங்கர் கூறும்போது, "ஒரு அரசு என்றால் நல்ல திறனுடன் செயல்பட வேண்டும். ஆனால், தற்போதைய கர்நாடக அரசு அவ்வாறு இல்லை. எனவே, இந்த அரசுக்கு அளித்துவந்த ஆதரவை மகர சங்கராந்தி நன்நாளில் வாபஸ் பெறுவதென முடிவு செய்தேன்" என்றார்.

மற்றொரு சுயேச்சை எம்எல்ஏவான நாகேஷ் கூறும்போது, " மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸுக்கு இடையே நல்ல புரிதல் இருப்பதாக தெரியவில்லை. இது ஆட்சி, நிர்வாகத்திலும் எதிரொலித்து வருகிறது. நிலையான, நல்ல அரசு அமைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நாங்கள் இக்கூட்டணிக்கு ஆதரவு அளித்தோம்.

ஆனால், எங்கள்  நல்லெண்ணம் நிறைவேறுவதாக தெரியவில்லை. எனவே, பாஜக தலைமையில் நிலையான, நல்ல அரசு அமைய ஆதரவளிக்க முடிவு செய்துள்ளேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP