Logo

அமைச்சர்களின் வருமானவரி முறைகேடு விவகாரம்: உ.பி. மாநில அரசு அதிரடி

உத்திர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் உட்பட அனைவரும் தங்கள் வரிப்பணத்தை தாங்களே செலுத்த வேண்டும் என்று சட்டம் அமல் படுத்தப் பட்டுள்ளது. ஊதியப் படிகளுக்கான சட்டம் 1981 - ல் கொடுக்கப்பட்டுள்ள விதிகளின் படியே இந்த சட்டம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.
 | 

அமைச்சர்களின் வருமானவரி முறைகேடு விவகாரம்: உ.பி. மாநில அரசு அதிரடி

உத்திர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் உட்பட அனைவரும் தங்கள் வரிப்பணத்தை தாங்களே செலுத்த வேண்டும் என்று சட்டம் அமல் படுத்தப் பட்டுள்ளது.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் உத்திர பிரதேச மாநிலத்தில், வி.பி. சிங் முதலமைச்சராக பதவி வகித்தபோது, அந்த மாநில முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் அவர்களுடைய வருமானத்திற்கு செலுத்த வேண்டிய வருமானவரியை கருவூலத்திலிருந்து எடுத்து அரசே  செலுத்தும் என்ற முறைகேடான புதிய சட்ட வரைவினை கொண்டு வந்து அமல்படுத்தினார். 
இவ்வளவு காலம் வெளிச்சத்துக்கு வராமல் இருந்து வந்த இந்த சட்டப்பூர்வமான முறைகேடு சமீபத்தில் அந்த மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதிவியேற்றக் கொண்டவுடன் தெரிய வந்தது. அதையடுத்து கடந்த வெள்ளியன்று, முதலமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர்களும், தங்கள் வரித்தொகையை தாங்களே செலுத்த வேண்டும் என்ற உத்தரப்பிரதேச மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. "இன்று முதல் முதலமைச்சர் உட்பட அனைவரும் தங்கள் வரிப்பணத்தை தாங்களே செலுத்த வேண்டும். இதுவரை அமைச்சர்களின் வரிகள், மாநில கருவூலத்திலிருந்து கொடுக்கப்பட்டது போல் இனியும் தரப்பட மாட்டாது". எனறு உத்தரப்பிரதேச அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த மாநில  நிதி அமைச்சர் சுரேஷ் குமார் கண்ணா இது குறித்து கூறுகையில், இந்த முடிவை, முதலமைச்சர் தனிப்பட்ட முறையில் பரிந்துரைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஊதியப் படிகளுக்கான சட்டம் 1981 - ல் கொடுக்கப்பட்டுள்ள விதிகளின் படியே இந்த சட்டம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP