மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிதான் : அடித்துச் சொல்லும் காங்கிரஸ் முதல்வர்!

மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தால் வியப்படைவதற்கில்லை என, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளதற்கு அந்த மாநில பாஜக தலைவர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
 | 

மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிதான் : அடித்துச் சொல்லும் காங்கிரஸ் முதல்வர்!

மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தால் வியப்படைவதற்கில்லை என, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளதற்காக, அந்த மாநில பாஜக தலைவர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற  தேர்தலில் வெற்றிப் பெற்று அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கெலாட், "வரும் மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தோல்வியை தழுவுவது உறுதி. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீ்ண்டும் ஆட்சிக்கு வந்தால் வியப்படைவதற்கில்லை" எனத் தெரிவித்தார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த துணை முதல்வர் சச்சின் பைலட், கெலாட்டின் தவறை சுட்டிக்காட்டியதும் அசடு வழிந்தப்படி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி தோல்வியை தழுவுவது நிச்சயம்" எனக் கூறி கெலாட் சமாளித்தார்.

அசோக் கெலாட்டின் இந்தப் பேச்சை சுட்டிக்காட்டி, " எப்போதும் உண்மையை பேசும்  கெலாட்டுக்கு நன்றி" என மாநில பாஜக நிர்வாகம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து அவரை கலாய்த்துள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP