Logo

வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் பெண் குழந்தைகளை தத்தெடுத்த ஐஏஎஸ் அதிகாரி

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் பலியான பீகார் மாநிலத்தை சேர்ந்த துணை ராணுவத்தினரின் பெண் குழந்தைகளை, ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தத்தெடுத்துள்ளார்.
 | 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம்தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்தனர். அவர்களில் பீகாரை சேர்ந்த ரத்தன் குமார் தாகூர் மற்றும் சஞ்சய் குமார் சிங்கும் அடங்குவர்.

இந்த இருவரின் 2 பெண் குழந்தைகளை ஷேக்புரா மாவட்ட கலெக்டர் இனாயத் கான் தத்தெடுத்துள்ளார். இந்தப் பெண் குழந்தைகளின் கல்விக்காக வங்கிக் கணக்கும் கலெக்டரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதில் மார்ச் 10-ம் தேதி வரை சேரும் தொகை, இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. இதில் தனது 2 நாட்கள் ஊதியத்தை இனாயத் கான் செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், உங்களால் எவ்வளவு முடியுமோ அதை மட்டும் மார்ச் 10-ம்தேதிக்குள் இந்த குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் வழங்குங்கள். நான் எனது 2 நாட்கள் ஊதியத்தை அளித்துள்ளேன்.

எனது மாவட்டத்தில் இருக்கும் அரசுப் பணியாளர்கள் ஒருநாள் ஊதியத்தை உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP