நான் என்றென்றும் பீகார் மக்கள் மனதில் உள்ளேன்- தேஜஸ்வி யாதவ் விளக்கம்

பீகார் மாநில எதிர்கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ் தனக்கு உடல் நிலை சரியில்லாததால் சட்டமன்றத்திற்கு வரமுடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
 | 

நான் என்றென்றும் பீகார் மக்கள் மனதில் உள்ளேன்- தேஜஸ்வி யாதவ் விளக்கம்

பீகார் மாநில எதிர்க் கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ், தனக்கு உடல் நிலை சரியில்லாததால் சட்டமன்றத்திற்கு வரமுடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

பீகார் மாநில குளிர்கால சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று கூடியது. இதில் எதிர்கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், செய்தியாளர்கள், முன்னாள் முதல்வர் ராப்ரி தேவியிடம் தேஜஸ்வி யாதவ் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ளாதது குறித்தும், அவரின் அரசியல் எதிர்காலம் குறித்தும் தொடர்ந்து கேள்வி எழுப்பினர்.

"கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ரிய ஜனதா தளம் கட்சி  அடைந்த தோல்வியிலிருந்து, தேஜஸ்வி யாதவ் எவ்வாறு மீண்டு வருவார்? அதுகுறித்த அவரின் திட்டமென்ன?" என்று பத்திரிகையாளர்கள் ராப்ரி தேவியிடம் கேள்வி எழுப்பினர். இதனாலும் ராப்ரி கோபமடைந்தார் எனக்கூறிப்படுகிறது

கோபமடைந்த ராப்ரி தேவி,  தேஜஸ்வி யாதவ் நலமுடன் வீட்டில் உள்ளார். அவர் கண்டிப்பாக சட்டமன்றத்திற்கு வருவார், அவருக்கு சிறந்த அரசியல் எதிர்காலம் உண்டு என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று தேஜஸ்வி யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனக்கு ஏற்பட்ட உடல் நலக்கோளாறால் நான் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தேன்.

அதனால் நான் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள முடியவில்லை. நான் என்றென்றும் பீகார் மக்கள் மனதில் உள்ளேன். ஊடகங்கள் எனது வருகை குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP