Logo

எனக்கு 25... உனக்கு 23...மகாராஷ்டிரத்தில் இறுதியானது பாஜக - சிவசேனா தொகுதி பங்கீடு!

மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தேர்தலுக்கான பாஜக -சிவசேனா கூட்டணி உறுதியாகியுள்ளதுடன், இவ்விரு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடும் இறுதி செய்யப்பட்டுள்ளது. இருகட்சிகளும் முறையே 25 ,23 இடங்களில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
 | 

எனக்கு 25... உனக்கு 23...மகாராஷ்டிரத்தில் இறுதியானது பாஜக - சிவசேனா தொகுதி பங்கீடு!

மகாராஷ்டிர மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான பாஜக -சிவசேனா கூட்டணி உறுதியாகியுள்ளதுடன், இவ்விரு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடும் இறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 25 இடங்களிலும், சிவசேனா 23 இடங்களிலும் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் ஆகியோர் இதனை செய்தியாளர்களிடம்நேற்றிரவு கூட்டாக தெரிவித்தனர்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிவசேனா இருந்து வருகிறது. இருப்பினும் அக்கட்சி மத்திய பாஜக அரசை தொடர்ந்து விமர்சித்து வந்ததால்,  இரு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி இருந்து வந்தது. பாஜக- சிவசேனா கட்சிகள் மீண்டும் தேர்தல் கூட்டணி அமைத்துள்ளதன் மூலம் அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. 

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் இவ்விரு கட்சிகளின் கூட்டணி மகாராஷ்டிரத்தில் 45 இடங்களை கைப்பற்றின என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP