நான் ஜாலியாகதான் இருக்கிறேன்: குமாரசாமி

இரண்டு சுயேச்சை எம்எல்ஏ.க்கள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதால், எனது தலைமையிலான அரசுக்கு எந்த நெருக்கடியும் ஏற்பட்டுவிடவில்லை என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
 | 

நான் ஜாலியாகதான் இருக்கிறேன்: குமாரசாமி

இரண்டு சுயேச்சை எம்எல்ஏ.க்கள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதால், எனது தலைமையிலான அரசுக்கு எந்த நெருக்கடியும் ஏற்பட்டுவிடவில்லை. நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

சுயேச்சை எம்எல்ஏ.க்களான நாகேஷ் மற்றும் சங்கர், கர்நாடக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனால் அந்த மாநில அரசியலில் பரபரப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இதுகுறித்து, மாநில முதல்வர் குமாரசாமி கூறும்போது, "எனது பலம் என்னவென்று எனக்கு நன்றாக தெரியும். இரண்டு சுயேச்சை எம்எல்ஏ.க்கள் தங்களது ஆதரவை வாபஸ் வாங்கிவிட்டதால் எங்கள் ஆட்சிக்கு நெருக்கடி வந்துவிடுமா என்ன?
நான் மிகவும் ஓய்வாகதான் உள்ளேன். கடந்த சில நாள்களாக மாநில அரசியலில் அரங்கேறி வரும் நிகழ்வுகளை கண்டு மகிழ்ந்து வருகிறேன்" என அவர் தெரிவித்தார்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP