Logo

ஐதராபாத்- சார்மினார் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது

பலத்த மழை காரணமாக ஐதராபாத்தில் உள்ள சார்மினார் கட்டிடத்தில் உள்ள தூணின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
 | 

ஐதராபாத்- சார்மினார் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது

பலத்த மழை காரணமாக ஐதராபாத்தில் உள்ள சார்மினார் கட்டிடத்தில் உள்ள தூணின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

ஐதராபாத்தின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் சார்மினார் கட்டிடத்தில் விரிசில் ஏற்பட்டது. இதனால் விரிசலை சரி செய்யும் பணி அங்கு  நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு ஐதராபாத்தில் பலத்த மழை பெய்தது.

அப்போது திடீரென்று சார்மினார் கட்டிடத்தில் உள்ள தூணின் சிறுப்பகுதி இடிந்து விழுந்தது. 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த புகழ்பெற்ற கட்டிடத்தை சாஹி மன்னர் பரம்பரையின் 5 வது மன்னர் முகம்மது குலி குதூப் ஷா கட்டினார்.

வரலாற்று சின்னமாக கருதப்படும் இந்த கட்டிடம் 160 அடி உயரமுடையது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சார்மினார் கட்டிடத்தை பார்த்து செல்கிறார்கள். இந்த நிலையின் சார்மினார் கட்டிடத்தின் இடிந்த பகுதியை தொல்லியல் துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP